அரசு மருத்துவமனையில் வென்டிலெட்டர் வெடித்ததில் 3 பச்சிளம் குழந்தைகள் பலி; மஹா.,வில் சோகம்

5


அமராவதி: மஹாராஷ்டிராவின் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் வெடித்து சிதறியதில் புதிதாக பிறந்த 3 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் 3வது மாடியில் பிறந்த குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் வெண்டிலேட்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில், பயங்கரமாக வெளியேறிய தீ மற்றும் புகையினால் பாதிக்கப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

'இதனால், பதறிப்போன மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அவசரப் பிரிவிற்கு விரைந்து சென்று குழந்தைகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 6 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனைக்கு நேரில் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement