பால் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
நமது நிருபர்
தமிழக அரசு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள், பாலை கீழே ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சட்டசபையில் அண்மையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி அறிவித்தது. தமிழக அரசு அறிவித்துள்ள இந்தக் கொள்முதல் விலை போதாது மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டையில் பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை மிகவும் குறைவு எனவும், இது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், எனவே அரசு லிட்டருக்கு பத்து ரூபாய் என பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு தங்களது பாலை கொடுக்காமல் புறக்கணித்து பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி வடக்காடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பு, பாலை கீழே ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம், பணிக்கம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன் கூடிய விவசாயிகள், ஆவினுக்கு பால் ஊற்றுவதை புறக்கணித்து, சொசைட்டி முன்பாகவே தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்கினர்.
பால் விலையை உயர்த்திதர பல்வேறுகை போராட்டங்கள் நடத்துவது சரியாக. இருக்கும். அதை விடுத்து பாலை ரோடுகளில் கொட்டுவது அயோக்கியத்தனம்
கேரிக்கை சரியானதுதான்
கீழ . கொட்டியது சரியல்ல
போராட்டம் என்கிற பெயரில் பாலை வீதிகளில் கொட்டி வீணாக்குவது முற்றிலும் சரியல்ல. சரியான விலை கிடைக்கவில்லையா? போகட்டும். பால் கோவா செய்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். சீஸ் செய்து விற்றால் நல்ல விலை கிடைக்கும். எவ்வளவோ வழிகள் உள்ளன. அதைவிட்டுவிட்டு பாலை வீதிகளில் கொட்டி வீண் செய்வது ஏற்கத்தக்கதல்ல மு ட் டா ள்களே...
பாலை வீட்டில் சிறிது சிந்தினாலே தரித்திரம் பிடிக்கும் என்று பெரியோர்கள் சொல்ல கேள்விபட்டு இருக்கிறேன் அப்படி இருக்கையில் இவர்கள் குடும்பம் எப்படி இருக்குமோ என்று அச்சமாக உள்ளது. பாலை இப்படி தரையில் ஊற்ற இவர்கள் உடலில் ரத்தம் பாலாக மாறியதா இவை? மாடுகள் உணவருந்தி தங்கள் குழந்தைகளுக்கும் மனித குலத்துக்கும் கொடுத்த பாலை இப்படி வீணாக்குவது கடவுளின் சாபம் இவர்கள் தலையில் ஏறும். சிந்திப்பீர்..... முறையாக அரசுக்கு தெரியபடுத்த நிறைய வழி முறைகள் உள்ளது.
அட முட்டா பசங்களா... பால கீழ ஊத்திட்டு உங்க தொழிலையே கேவல படுத்தூறிங்க
எதுக்கு வீணாக தரையில் கொட்டணும் ? கீழே ஊற்றனும் ? பசியில் வாடும் ஏழை குழந்தைகளுக்கு தரலாமே ? வயதானவர்களுக்கு தரலாமே ? கோவிலுக்கு தரலாமே ? பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுக்கலாமே ? மோராக்கி தாகத்தில் தவிப்பவர்களுக்கு கொடுக்கலாமே ?மேலும்
-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-
அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘அப்பாவாக இருந்து கற்றுக் கொடுக்கும் 10 வயது பின்னி!’ –––––––––––––––
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்