கட்டட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை

திருத்தணி: உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 45 வயது கட்டட மேஸ்திரி, விஷம் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கய்யா, 45. கட்டட மேஸ்திரி. இவர், சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், உடல்நலம் குணமாகாததால் மனமுடைந்த அங்கய்யா, நேற்று முன்தினம் இரவு, பூச்சிக் கொல்லி மருந்து குடித்து மயங்கினார்.

இதையடுத்து, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை அங்கய்யா உயிரிழந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement