மகசூல் அதிகரிக்க மரங்களைகவாத்து செய்வது அவசியம் தோட்டக்கலை துறை அறிவுறுத்தல்
தேனி, ஆக. 25–அடுத்த ஆண்டு நல்ல மகசூல், தரமான மாம்பழங்களை பெற மாமரங்களை கவாத்து செய்யுமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா அறிவுறுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது: மா பயிரில் கவாத்து என்பது பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்துவதாகும். இதனால் புதிய கிளைகள், பூ மொட்டுகள் அதிகரித்து, மகசூல் அதிகரிக்கும். ஆக., செப்.,ல் கவாத்து செய்ய வேண்டும். குறிப்பாக நோய் தாக்கிய, காய்ந்த கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். இதனால் சூரிய வெளிச்சம், காற்றோட்டம் நன்றாக கிடைக்கும். வயதான, உற்பத்தி குறைந்த மரங்களில் 30 முதல் 40 சதவீத கிளைகளை அகற்றுவதால் புதிய கிளைகள் உருவாகி உற்பத்தி அதிகரிக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட மாமரத்திற்கு 50 கிலோ தொழு உரம், 2.2 கிலோ யூரியா, 6.25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2.5 கிலோ பொட்டாஷ் உரங்களை செப்., அக்.,ல் மழைக்கு பின் இட வேண்டும். உரத்தை மரத்தின் தண்டு பகுதியில் இருந்து 40முதல் 90 செ.மீ., துாரத்தில் இட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ஈரான் என் மகன்களில் ஒருவரைக் கொல்ல முயன்றது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு
-
விலை பட்டியல் வைக்காமல் இருந்தால் நடவடிக்கை; உணவு வகையில் கலப்படம் செய்தால் புகார் செய்யலாம்
-
கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் திமுக.,வுக்கு 10 சீட் கூட கிடைத்திருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
-
வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு மாவட்டங்களை முந்தும் மாநகராட்சிகள்
-
ஏன் ஹிந்துக்களை மட்டுமே குறிவைக்கிறீர்கள்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
-
மின் கணக்கீட்டில் 'டேபிள் ஒர்க்' சாத்தியமா: அமைச்சரின் பேச்சால் கிளம்பியது சர்ச்சை