ஏன் ஹிந்துக்களை மட்டுமே குறிவைக்கிறீர்கள்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

7

புதுடில்லி: ஏன் ஹிந்துக்களை மட்டும் குறிவைக்கிறீர்கள் என காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆணாதிக்கத்தை நொறுக்குங்கள் என்று காங்கிரஸ் சொல்கிறது.ஏன் எப்போதும் ஹிந்துக்களை மட்டும் குறிவைக்கிறீர்கள்? சிறுபான்மைப் பெண்களின் நிலை என்ன? முத்தலாக் நிலை என்ன? முஸ்லிம் பெண்கள் நமது சகோதரிகளும் மகள்களும் இல்லையா?

நீங்கள் உண்மையாகவே பெண்களுடன் நின்றால், ஒவ்வொரு பெண்ணுடனும், ஒவ்வொரு சமூகத்துடனும், எல்லா நேரங்களிலும் துணை நில்லுங்கள். ராகுலின் ஆணாதிக்கத்தை தகர்க்க வேண்டும். நமது இந்திய பெண்கள் இஸ்ரோவில் முன்னணியில் இருக்கிறார்கள். போர் விமானங்களை இயக்குகிறார்கள்.

ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்கிறார்கள். பெண் சக்தி பல்வேறு துறைகளில் செழித்து வளர்ந்து வருகிறது. இந்திய சமூகத்தைப் பிளவுபடுத்துவதற்காக இந்திய மகள்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.


@block_G@

ராகுல் பேசியது என்ன?

மஹாராஷ்டிராவின் புனேவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களிடையே பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'பெண்கள் குழந்தை பருவத்தில் தந்தையையும், இளமையில் கணவரையும், முதுமையில் மகன்களையும் சார்ந்திருக்க வேண்டும் என, மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல; அவர்களுக்கே உரியவர்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆண்களின் கட்டுப்பாட்டில் பெண்கள் இருக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் கருத்து வெட்கக்கேடானது' என்றார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ராகுலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.block_G

Advertisement