வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு மாவட்டங்களை முந்தும் மாநகராட்சிகள்

கோவை: மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெறும் வீட்டுப்பட்டியல் தயாரிக்கும் பணி, இதுவரை 53 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இப்பணிகள் மாநகராட்சி பகுதி என்றும், தாலுகா, பேரூராட்சி, நகராட்சிகளை உள்ளடக்கிய மாவட்டப் பகுதி என்றும் இரண்டாக பிரித்து பணிகள் நடந்து வருகின்றன.

பெரிய மாநகராட்சிகளில் கணக்கெடுப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 25 மாநகராட்சிகளின் தரவரிசையில் திண்டுக்கல் - 98, கோவை - 78, ஈரோடு -77, காஞ்சிபுரம் -75 ஆகிய நான்கு மாநகராட்சிகள் முன்னணியில் உள்ளன. அதேவேளையில், சிவகாசி, திருநெல்வேலி, காரைக்குடி, கடலூர் ஆகிய மாநகராட்சிகள் கடைசி இடங்களில் உள்ளன.

மாநகராட்சி பகுதிகளுடன் ஒப்பிடுகையில், மாவட்ட அளவிலான கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் பணிகள் மெதுவாகவே நடைபெறுகின்றன. உதாரணத்திற்கு, கோவை மாநகராட்சியில் 78 சதவீத பணிகள் முடிந்த நிலையில், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 42 சதவீத நிறைவடைந்துள்ளன. திண்டுக்கல் மாநகராட்சியில் 98 சதவீத பணிகள் முடிந்திருந்தாலும், மாவட்ட அளவில் 69 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. இருப்பினும், திருவாரூர் மாவட்டம் 100 இலக்கை எட்டி முதலிடத்தில் உள்ளது. ராமநாதபுரம், கரூர், நீலகிரி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன. 2.59 கோடி வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பதில் 66 ஆயிரம் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement