ஈரான் என் மகன்களில் ஒருவரைக் கொல்ல முயன்றது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு
ஜெருசலேம்: 'ஈரான் என் மகன்களில் ஒருவரைக் கொல்ல முயன்றது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நம்பமுடியாத ஒன்று நடந்தது. ஈரான் எனது மகன்களில் ஒருவரைக் குறிவைத்தது. எனது மகன்களில் ஒருவரைக் கொல்ல முயன்றது.
தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது ஆடம்பரம் கிடையாது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்தின் போது, மக்கள் ஓரளவு நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
அந்த அச்சுறுத்தல் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டிய அளவுக்குத் தீவிரமானது; பாதுகாப்பு இல்லாவிட்டால் இந்த முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்கள் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார்கள். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
மகன்களான யாயிர் அல்லது அவ்னர் ஆகிய இருவரில் யார் குறிவைக்கப்பட்டார் என்றும், இந்தக் கொலை முயற்சி எப்போது, எப்படி நடந்தது என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெளிவுப்படுத்தவில்லை.
போரில் இறப்பது சகஜம் தான்மேலும்
-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-
அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘அப்பாவாக இருந்து கற்றுக் கொடுக்கும் 10 வயது பின்னி!’ –––––––––––––––
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்