துபாயில் இறந்த தொழிலாளிஉடலை மீட்க கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே கடம்பூரை சேர்ந்தவர்  சீனி 40. துபாயில் வேலை பார்த்த இடத்தில் இறந்து விட்டார்.  அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.  இது குறித்து சீனி மனைவி ராமநாதபுரம் கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்துள்ளார். அதில் சீனி கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். ஆக.,23ல் நெஞ்சுவலி ஏற்பட்டு சீனி 40, இறந்து விட்டார். அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தினர். ––

Advertisement