பட்ஜெட்: சமூக நலத்துறை
பட்ஜெட்டியில் சமூக நலத்துறையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை எளிதாக பெரும் வகையில் ஒருங்கிணைந்த இணையவழி நலத்திட்ட சேவைத் தளம் உருவாக்கப்படும். அரசு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.
* அரசு பள்ளிகளில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு மதியிறுக்கம், மனவளர்ச்சிக் குறைபாடு, கற்றல் குறைபாடு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
* மேம்பட்ட குழந்தை வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகள் மற்றும் மாற்றுத் திறன்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் கிராமங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் வளர்ச்சி மதிப்பீட்டு முகாம்கள், பெற்றோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
* மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முதியோர்கள் மற்றும் சமூகத்தின் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றும் தனிநபர்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை கவுரவிக்கும் வகையில் ‘புதுச்சேரி மாநில சமூக சேவை விருதுகள்’ வழங்கப்படும்.
* இதற்காக சமூகநலத்துறைக்கு ரூ. 132.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
ஈரான் என் மகன்களில் ஒருவரைக் கொல்ல முயன்றது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு
-
விலை பட்டியல் வைக்காமல் இருந்தால் நடவடிக்கை; உணவு வகையில் கலப்படம் செய்தால் புகார் செய்யலாம்
-
கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் திமுக.,வுக்கு 10 சீட் கூட கிடைத்திருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
-
வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு மாவட்டங்களை முந்தும் மாநகராட்சிகள்
-
ஏன் ஹிந்துக்களை மட்டுமே குறிவைக்கிறீர்கள்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
-
மின் கணக்கீட்டில் 'டேபிள் ஒர்க்' சாத்தியமா: அமைச்சரின் பேச்சால் கிளம்பியது சர்ச்சை