இன்ஸ்டா காதலனுடன் இளம்பெண் ஓட்டம்
விருத்தாசலம்: இன்ஸ்டா காதலுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தே.பவழங்குடியை சேர்ந்தவர் முருகேசன் மகன் வேல்முருகன். இவருக்கும் மேல்புளியங்குடி வீரசெல்வி,23; என்பவருக்கும், 5 மாதங்களுக்கு முன் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. சமீபத்தில் வேல்முருகன் வெளிநாடு சென்ற நிலையில், வீரசெல்வி தனது நகைகளை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு, இன்ஸ்டாவில் பழக்கமான காதலனுடன் மாயமானார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement