வரவேற்பு பெற்ற சீன இரட்டையரின் பரத நாட்டிய அரங்கேற்றம்
பீஜிங்: சீனாவில் இரட்டை சகோதரியர் அரங்கேற்றம் செய்த பரதநாட்டியம் நிகழ்ச்சி பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்றுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில், 16 வயது சீன இரட்டை சகோதரிகளான ஜின் யான்ஷு மற்றும் ஜின் யனாய் ஆகிய இருவரும் திரளான பார்வையாளர்கள் முன்னிலையில் தங்கள் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தினர்.
நாடுகளை கடந்த கலை இணைப்பின் ஒரு அற்புதமான வெளிப்பாடாக இது அமைந்ததுடன், இந்திய பாரம்பரிய நடனத்தை அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்திய விதம் அனைவரது பெரும் பாராட்டையும் பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சீனாவுக்கான இந்திய துாதர் விக்ரம் துரைசாமி மற்றும் அவரது மனைவி சங்கீதா துரைசாமி தலைமை தாங்கியதுடன், சிறுமியரை பாராட்டினர்.
இச்சகோதரிகள் இருவரும் தங்கள் மூன்றாம் வயதிலேயே பரத நாட்டியம் கற்க தொடங்கியுள்ளனர். பீஜிங்கில் உள்ள 'சங்கீதம் இந்திய கலை பள்ளி'யை நடத்தும் புகழ்பெற்ற சீன பரதநாட்டிய கலைஞர் ஜின் ஷான் ஷானிடம் இவர்கள் பயிற்சி பெற்றனர்.
ஜின் ஷான் ஷான், சென்னையில் உள்ள கலாஷேத்ராவில், பிரபல நடனக் கலைஞர் லீலா சாம்சனிடம் பரதம் கற்றவர்.
ஏற்கனவே, இந்த இரட்டை சகோதரியர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டுக்கு சென்றிருந்த நம் பிரதமர் மோடியின் முன்னிலையிலும் நடனமாடியுள்ளனர். மேலும், பீஜிங்கில் நடைபெற்ற ராமாயண நடன நாடக தயாரிப்பிலும் பங்கேற்றுள்ளனர்.
பன்றி மூஞ்சி அமீருக்கும் சோரம் போன ரஞ்சித்துக்கும் பத்திக்கிட்டு எரியணுமே
திராவிடத்துக்கு தலை குனிவு ..சறுக்கல் … கழக ஆட்சியிருந்தால் நடந்திருக்குமா ?
வாழ்த்துக்கள் சீன இரட்டை சகோதரிகளுக்கு.