பொதுமக்கள் பேட்டி -படம்
மகளிருக்கு முக்கியம்
பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம்னா, வேலைக்குப் போறவங்களுக்கு தினமும் செலவாகுற பணம் மிச்சமாகும். அதே மாதிரி, வருஷத்துக்கு மூணு காஸ் சிலிண்டர் இலவசம்னாலும் வீட்டுச் செலவு கொஞ்சம் குறையும். வேலைக்குப் போற பெண்களுக்கும், வீட்டை கவனிச்சுக்குற பெண்களுக்கும் இந்த ரெண்டு திட்டமும் ரொம்ப உதவியா இருக்கும். அதனாலதான் இந்த அறிவிப்பு பெண்களுக்கு சந்தோஷம் தருது.
– காவியா, ஆறுமுத்தாம்பாளையம்.
ரூ.2500 திட்டம் வருமா?
ஆறு சிலிண்டர் கிடைக்கும்னு எதிர்பார்த்தவங்க இருக்கலாம். ஆனா, இப்போ மூனு சிலிண்டராவது இலவசமா கிடைக்குதுன்னா, ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு அது பெரிய உதவிதான். பஸ் பயணமும் இலவசம்னா பெண்களுக்கு இன்னும் செலவு மிச்சமாகும். அதே மாதிரி, மாதம் 2,500 ரூபாய் கொடுக்கிற திட்டத்தையும் சீக்கிரம் கொண்டு வந்தா, நிறைய குடும்பங்களுக்கு நல்லா இருக்கும்.
– ராஜசேகர், பல்லடம்.