பட்டுக்கூடு விவசாயத்தை பாதுகாக்க கோரிக்கை

பழநி, ஆக.25-

‘பட்டுக்கூடு விவசாயத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்’ என தமிழ்நாடு பட்டுக்கூடு விவசாயிகள் உற்பத்தி நலச்சங்க மாநில செயலாளர் செல்வராஜ் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

விவசாயிகளுக்கு தரமான முட்டை, இளம்புழுக்களை ஆய்வு செய்து வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டம் இரண்டு ஆண்டுகளாக இல்லாத நிலையில் மீண்டும் அதனை மாற்றம் செய்து செயல்படுத்த வேண்டும். வறட்சி காரணமாக மல்பெரி செடிகள் அழிந்து வருகின்றன. அதற்கென பழைய விவசாயிகளுக்கு புதிய நடவு செய்ய மானியம் வழங்க வேண்டும். உற்பத்தி செலவு உயர்வு காரணமாக பட்டுக்கூட்டிற்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.750 நிர்ணயம் செய்ய வேண்டும். தரமான தளவாட பொருட்கள் கொள்முதல் செய்து வழங்க வேண்டும். அங்காடி விதிமுறைகளை அனைத்து அங்காடிகளும் செயல்படுத்த வேண்டும். தர்மபுரி அங்காடியை விரைவில் செயல்படுத்த வேண்டும். மண்வளத்தை மேம்படுத்த திட்டமிடப்பட வேண்டும். புழு வளர்ப்பு மனை, மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க பட்டு நூற்பாலைகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.

Advertisement