32 தங்க பத்திரங்களுக்கு முன்கூட்டிய முதிர்வு அறிவிப்பு

தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்காக, 2026 அக்டோபர் முதல் 2027 மார்ச் வரையிலான காலக்கட்டத்திற்கான 'முன்கூட்டிய முதிர்வு' அட்டவணையை ஆர்.பி.ஐ., வெளியிட்டுள்ளது.

இதன்படி, 32 சீரீஸ்களில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்களின் 8 ஆண்டு முதிர்வு காலத்திற்கு முன்பாகவே தங்க பத்திரங்களை விற்று பணமாக்கிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2019-20, 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தங்க பத்திரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள தங்க பத்திரங்களின் சீரீஸை ஆர்.பி.ஐ., வலைதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அட்டவணையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விண்ணப்ப கால வரம்பிற்குள் பத்திரங்களை வாங்கிய வங்கி, தபால் அலுவலகம் அல்லது என்.எஸ்.டி.எல்., சி.டி.எஸ்.எல்., ஆர்.பி.ஐ., தளம் வழியாக கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட விண்ணப்ப கால வரம்பை தவறவிட்டால், அந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது. அடுத்தகட்ட மீட்பு தேதி வரை அல்லது 8 ஆண்டு முதிர்வு வரை காத்திருக்க வேண்டும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement