லலிதா ஜுவல்லரி 24% உயர்வு

சென்னையை தலைமையிடமாக கொண்ட 'லலிதா ஜு வல்லரி மார்ட்' நிறுவனத்தின் பங்குகள் பங்கு சந்தைகளில் நேற்று வலுவான தொடக்கத்துடன் பட்டியலாகின. இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ., விலையான 201 ரூபாயைவிட 32 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கின் விலை 265 ரூபாய் என பட்டியலானது. வர்த்தக முடிவில் 24 சதவீதம் உயர்ந்து, 248.40 ரூபாயில் முடிந்தது.

முன்னதாக, லலிதா ஜு வல்லரி மார்ட் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் 62.97 மடங்கு அளவிற்கு விண்ணப்பங்கள் குவிந்தன. இதில், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவு 145.38 மடங்கும், நிறுவன சாரா முதலீட்டாளர்கள் பிரிவு 73.90 மடங்கும், சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவு 11.81 மடங்கும் சந்தா பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement