கர்நாடகாவில் 3 தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி 'என்கவுன்டர்!' பிரேத பரிசோதனையில் வெளியானது அதிர்ச்சி தகவல்
சாம்ராஜ்நகர்: கர்நாடகாவின் ஹனுார் வனப்பகுதியில், சுட்டு கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. பலியானவர்களை, மிக அருகில் இருந்து சுட்டு கொன்றது தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகா காவேரி வனவிலங்கு சரணாலய வனப்பகுதியில், கடந்த 15ம் தேதி அதிகாலை வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், தோமியார்பாளையா கிராமத்தை சேர்ந்த தமிழர்கள் அந்தோணிசாமி, 50, ஜான் ரோஸ் பீட்டர், 45, செபாஸ்டின் டேவிட் குமார், 33 ஆகியோர் உயிரிழந்தனர்.
வேட்டை கும்பல், தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால், சுட்டு கொன்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், வனப்பகுதியில் மாடுகளை தேடி சென்ற விவசாயிகளை சுட்டு கொன்று விட்டதாக, விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
ஆழமான காயம்
உயிரிழந்த மூன்று பேரின் பிரேத பரிசோதனை, கடந்த 16ம் தேதி, மைசூரில் உள்ள கே.ஆர். அரசு மருத்துவ மனையில் நடத்தப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல் நேற்று வெளியானது. அதில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
'பலியான மூன்று பேரும், 10 அடி அல்லது அதற்கும் குறைவான நெருங்கிய துாரத்தில் இருந்து, 'பம்ப் ஆக் ஷன் ஷாட் கன்' மூலம் சுடப்பட்டுள்ளனர். ஜான் ரோஸ் பீட்டரின் இடது காது பகுதியில் இருந்து நெஞ்சு பகுதி வரை சுமார் 28 செ.மீ., நீளத்திற்கு ஆழமான மற்றும் கடுமையான காயம் கண்டறியப்பட்டுள்ளது.
'மற்ற இருவரின் நெஞ்சு, தொடை பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் உள்ளாடைகளில் இருந்து தலா ஐந்து, 'அலுமினியம் பிரைமர்'கள் கண்டெடுக்கப்பட்டன' என்பது உள்ளிட்ட தகவல்கள் அதில் உள்ளன.
பிரச்னை
வனத்துறையினர் துாரத்தில் இருந்து சுட்டதாக கூறிய நிலையில், மிக அருகில் இருந்து சுட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது அரசுக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகையில், ''இதன் வாயிலாக, மூன்று பேரையும் வனத்துறை போலி என்கவுன்டர் செய்தது உறுதியாகி உள்ளது. வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்,'' என்றார்.
@block_B@
'பம்ப் ஆக் ஷன் ஷாட் கன்' என்பது, குறுகிய துாரத்தில் உள்ள இலக்கை தாக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த துப்பாக்கியின் குழலுக்கு கீழே நகரும் கைப்பிடி இருக்கும். ஒவ்வொரு முறை சுட்ட பின்பும், கைப்பிடியை பின்னோக்கி இழுத்து, மீண்டும் முன்னோக்கி தள்ள வேண்டும்.
பின்னோக்கி இழுக்கும் போது, பயன்படுத்தப்பட்ட தோட்டா வெளியேறும்; முன்னோக்கி தள்ளும் போது புதிய தோட்டா துப்பாக்கி அறைக்குள் ஏறும். இதில் இருந்து வெளியேறும் தோட்டா ஒரே குண்டாக செல்லாமல், பல சிறிய இரும்பு அல்லது ஈய துகள்களாக சிதறி பாயும். அவை, உடலை துளைக்கும் போது கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.
இதேபோல, அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் உள்ளாடைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அலுமினியம் பிரைமர்கள் என்பது, நாட்டு துப்பாக்கியை பற்ற வைக்க பயன்படுத்தப்படும் வெடிபொருள்.block_B
நாட்டின் மூன்று அங்கங்களிலும் குற்றவாளிகள் நிறைந்துள்ளதால் எதுவும் நடக்கும்.அவர்கள் ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதால் இந்நிலை.மேலும்
-
ஈரான் என் மகன்களில் ஒருவரைக் கொல்ல முயன்றது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு
-
விலை பட்டியல் வைக்காமல் இருந்தால் நடவடிக்கை; உணவு வகையில் கலப்படம் செய்தால் புகார் செய்யலாம்
-
கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் திமுக.,வுக்கு 10 சீட் கூட கிடைத்திருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
-
வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு மாவட்டங்களை முந்தும் மாநகராட்சிகள்
-
ஏன் ஹிந்துக்களை மட்டுமே குறிவைக்கிறீர்கள்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
-
மின் கணக்கீட்டில் 'டேபிள் ஒர்க்' சாத்தியமா: அமைச்சரின் பேச்சால் கிளம்பியது சர்ச்சை