டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
புதுடில்லி: டில்லியில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது; 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது; 166 விமானங்கள் தாமதமாகின.
டில்லியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால், அப்பகுதிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, பிரதான சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் தேங்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது; 166 விமானங்கள் தாமதமாகின.
ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, எய்ம்ஸ், அசோகா சாலை உள்ளிட்ட டில்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கின; சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பார்லிமென்ட் தெரு, கன்னாட் பிளேஸ், எய்ம்ஸ், ஐடிஓ, ஆர்.கே.புரம் மற்றும் பெரோஸ்ஷா சாலை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
டில்லி முழுவதும் பல இடங்களில் மிதமான மழையும், ஆங்காங்கே கன முதல் மிகக் கனமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது; மின்னல் மற்றும் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றைய தினமும் கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
2047 க்குள்ள சரியாக்கி தராம்