சிவகங்கையில் விவசாயிடம் ரூ.85 ஆயிரம் மோசடி

சிவகங்கை,ஆக.26-

சிவகங்கை விவசாயிடம் ஜெய்ப்பூர் மாட்டு வியாபாரி ரூ.85 ஆயிரம் மோசடி செய்த நிலையில் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை அருகே கோமாளிப்பட்டியை சேர்ந்தவர் மணி 58.இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரை கடந்த பிப்.9ல் ஜெய்ப்பூரை சேர்ந்த அசோக்குமார் சிம்மா என்பவர் தொடர்பு கொண்டார்.

அவர் மாட்டுப்பண்ணை வைத்திருப்பதாகவும்,குறைந்த விலையில் பசு மாடுகளை விற்பனை செய்வதாகவும் மணியிடம் அறிமுகம் ஆகியுள்ளார்.அவர் கூறியதை நம்பிய மணி தொடர்ந்து அவரிடம் பேசியுள்ளார்.  இரண்டு பசு மாடுகள் வாங்குவதற்கு ஜிபேவில் ரூ.85 ஆயிரம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அசோக்குமார் சிம்மா அவர் கூறியது போல் பசுமாடு கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணி நேற்று சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தார்.

Advertisement