பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-நமது நிருபர்-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாணவி தாக்கல் செய்த வழக்கை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பிரயாக்ராஜில் உள்ள ஒரு பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் இந்தர்ஜித் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவி தரப்பில் வாதிடுகையில், ''10ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் தான் படித்தேன். அப்பொழுது எல்லாம் ஹிஜாப் அணிவதற்குப் பள்ளி நிர்வாகம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து ஹிஜாப் அணிய விரும்பியதால், 11ம் வகுப்பில் சேருவதில் தனக்குச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. ஹிஜாப் அணிவது தனது மதத்தின் இன்றியமையாத மத நடைமுறையாகும். எனது மத சுதந்திர உரிமையின் கீழ் அதைத் தொடர்ந்து அணிய நான் அனுமதிக்கப்பட வேண்டும்.'' என்றார்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
* ஹிஜாப் அணியாததால் மத நம்பிக்கைக்கு இடையூறு ஏற்படாது. இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு ஹிஜாப் அத்தியாவசியமானது கிடையாது.
* அரசியலமைப்பின் 25வது பிரிவைச் சார்ந்து முன்வைக்கப்படும் ஒரு கோரிக்கையை, அதற்கான அவசியமான உண்மை மற்றும் சட்ட அடிப்படைகள் இல்லாமல், வெறும் கூற்றின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது
* பள்ளியின் உடைக் கொள்கை சீரானது மற்றும் பாகுபாடற்றது. மாணவர்கள் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் மாற்றங்களைக் கோர முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையைடுத்து மாணவியின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், பள்ளி தனது பரிந்துரைக்கப்பட்ட சீருடைக் கொள்கையை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஹிஜாப் அணிவது மத சுதந்திர உரிமையின் அடிப்படையில் இன்றியமையாத நடைமுறை என்று, மாணவி முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் நீதிபதிகள் கூறியதாவது:
மாணவியின் கோரிக்கை தொடர்பாக, பல்வேறு வகுப்பறைகளின் புகைப்படங்களை நாங்கள் ஆய்வு செய்தோம். அவரைத் தவிர, அவரது மதத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவியும் ஹிஜாப் அணியவில்லை. அவர்கள் சீருடை மட்டுமே அணிந்திருந்தனர்.
பள்ளியின் சீருடை விதிமுறைகள் நியாயமானதாகவும், பாகுபாடற்றதாகவும், ஒழுக்கம் மற்றும் சமத்துவத்தைப் பேணும் வகையில் இருக்கும் வரை, ஆடை தொடர்பான விதிகளை அமல்படுத்துவதில் முழு அதிகாரத்தையும் பள்ளி நிர்வாகம் கொண்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனத்துக்கு தனது வளாகத்திற்குள் சீருடை விதிமுறையை அமல்படுத்த முழு உரிமை உண்டு; பள்ளிச் சீருடையைக் கடைப்பிடிப்பது கட்டாயமானது. ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோருவதற்கு எந்தச் சட்டப்பூர்வ உரிமையும் இல்லை.
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்றோ, அதை அணியாவிட்டால் ஒருவரின் மத நம்பிக்கையைப் பாதிக்கும் என்றோ, போதுமான மதரீதியான அல்லது சட்டரீதியான ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்துக்களுக்காக குறிப்பாக இந்துப் பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு பதிவு: இந்தி நடிகர்
ஆமிர் கான் பெண்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாவதை பற்றி சத்யமேவ ஜெயதே என்ற பெயரில் தொலைக்காட்சி சீரியல்களை நடத்துகிறார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் முஸ்லீம் பெண்கள் முத்தலாக் மற்றும் ஹலாலாவால் பாதிக்கப்படுவதை சொல்லாமல் தெளிவாக மறைத்து விடுகிறார்.
ஆப்கானிஸ்தானுக்கு செல்லவும். அங்கு இஸ்லாம் மத வழக்கங்கள் கட்டாயம்.
அங்கு சென்றால் படிக்க கூட முடியாது.
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கோரலாம், சிறுபான்மை என்பதால்
ஹிஜாப் என்ற முக்காடு போடுவதை விட என்னுடைய இந்த கருத்து முக்கியமானது.
சிறுபான்மை அந்தஸ்து அந்த மக்களை தேசத்துடன் ஒருங்கிணைக்க விடுவதில்லை. நீதிமன்றம் கூட பயந்து தான் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டியுள்ளது.
மத அடிப்படையில் காங்கிரஸ், மதம் மாறிய ஜின்னா சொல் கேட்டு நாட்டை பிரித்து கொடுத்த பின்பும் எதற்கு இந்தியாவில் சிறுபான்மை அந்தஸ்து, சலுகை, வக்பு வாரியம் போன்ற ஏராள நடைமுறைகள். அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பு இருக்குமா?
அரேபியாவிற்கு செல்ல உத்தரவிடவும். தனக்கு பிடித்தமான உடை மற்றும் மத வழிபாடு செய்யும் நாட்டிற்கு செல்லலாம்
எல்லா இடங்களிலும் மதத்தை சம்பந்த படுத்துவாங்க எப்படி படிப்பு ஏறும்
இங்க தமிழ் நாட்டில் அது மாதிரி சீருடை நடைமுறைப்படுத்தவேண்டும். அதுவே மாணவ மணிகளிடம் ஒரு மத சார்பற்ற நம்பிக்கையை விதைக்கும், பிறகு விருச்சமாகி பலன் கொடுக்கும். எல்லா வகையான மத ஜாதி ரீதியான அடையாளங்கள் கூடாது. சரி அப்புறம் சீக்கியர்கள் எப்படி. அரசு முறையான எல்லோரும் பள்ளி கல்லூரி நிலையங்களில் ஒற்றுமை ஒங்க வழி ஏற்படுத்தினால் நல்லது. பள்ளி கல்லூரி நேரம் தவிர்த்து எப்படி வேண்டுமானாலும் வழி படும் முறைகள் இருக்கட்டும்.
ராகுல் மற்றும் பிரியங்கா பர்கா அணிவது அந்த பெண்ணின் உரிமை என்பார்கள்...வட இந்திய இந்து பெண்கள் முக்காடு போட்டால் ஆணாதிக்கம் என்பார்கள்..
மரியாதையாக வெளியில் ஓடிவிடவும் ..
மிக சரியான தீர்ப்பு. இந்த தீர்ப்பை இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்தவர்களுக்கும் பின்பற்றவேண்டும். தவறினால் நீதிமன்றம் அந்த மாநிலத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.