சிலுகவயல் கிராமத்தார் பீமன் வேட நிகழ்வு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா செப்.,4 ல் நடக்கிறது. தினமும் பல்வேறு மண்டகப்படி நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக சிலுகவயல் கிராமத்தாரின் மண்டகப்படி நிகழ்வாக இளைஞர்களின் பீமன் வேட நிகழ்வு நடந்தது.

முன்னதாக திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து இளைஞர்கள் உடலில் வர்ணம் பூசியும், வேப்ப இலைகளை உடலில் கட்டிக் கொண்டும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து திரவுபதி வாழ்க்கை வரலாறை எடுத்துரைத்தனர். மாலையில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.

Advertisement