இரட்டிப்பு வருவாய்க்கு இளந்தண்டு கீரை
இளந்தண்டு கீரை சாகுபடி குறித்து, புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த குறிஞ்சி மகளிர் குழு நிர்வாகி எஸ். தீபா கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் பல்வேறு மகளிர் குழுவினர் கீரை விவசாயம் செய்து வருகிறோம். அதில், தண்டு கீரை, அரை கீரை உள்ளிட்ட பல்வேறு கீரைகள் சாகுபடி செய்து வருகிறோம்.
பெரும்பாலான கீரை சாகுபடி செய்வோர், ரசாயன உரங்களை பயன்படுத்தி கீரைகளின் வளர்ச்சியை வளமாக காட்டி, ஒரு கட்டு கீரை 10 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்கின்றனர்.
எங்கள் மகளிர் குழுவினர், ரசாயன உரம் இன்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி ஒரு கீரைகளை தேர்வு செய்து விதைத்துள்ளோம்.
அந்த வரிசையில், எங்கள் குழுவின் சார்பில், இளந்தண்டு கீரை சாகுபடி செய்து விற்பனை செய்து வருகிறோம்.
பொதுவாக தண்டுக்கீரை நன்றாக வளர்ந்த பின் தான் விற்பனை வேண்டும். நாங்கள் இளங்கீரையாக இருக்கும் போது பறித்து விற்பனை செய்து விடுகிறோம்.
இது போன்ற இளங்கீரைக்கு, அதிக பணம் கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
மேலும், 60 நாளில் கிடைக்கும் தண்டு கீரை மகசூல், 15 நாளில் இளந்தண்டு கீரையில் கிடைக்கிறது. அடுத்தடுத்து மகசூல் சாகுபடி செய்து விடலாம். இதன் மூலமாக, இரட்டிப்பு வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
– எஸ். தீபா,
95004 48594.