மேட்டூர் அணை நாளை மறுநாள் திறப்பு; ஏற்பாடுகள் தீவிரம்
சேலம்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை மறுநாள் (ஆக.,28) திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடைபெற்று வருகிறது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பொய்த்து போன மழை மற்றும் கர்நாடகா நீர் திறக்காதது உள்ளிட்ட காரணங்களால், அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது.
இதனால், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. இதனால், இன்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் 88.84 அடியாகவும், நீர் இருப்பு 51.33 டிஎம்சி ஆகவும் உள்ளது.
இந்த நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை மறுநாள் (ஆக.,28) திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபையில் அமைச்சர் ஆனந்த், 'விரைவில் நல்ல செய்தி வரும்' என்று கூறினார். அமைச்சர் செங்கோட்டையன், 'இன்னும் தேதி முடிவு செய்யவில்லை' என்றார்.
எனினும், 28ம் தேதி முதல்வர் விஜய் மேட்டூர் வருவதற்கான பயணம், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை மேட்டூர் அணையின் வலது கரை பகுதியில் நீர் திறக்க உள்ள இடத்தை சேலம் மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி சேலம் டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமனி, எஸ்பி குத்தாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அணை பொறியாளரிடம் ஆலோசனைகளை வழங்கினர்
தண்ணீர் போதுமா?
குறுவை பயிர் சாகுபடி செய்வதற்கு குறைந்தபட்சம் 90 நாளைக்கு காவிரியில் தண்ணீர் திறக்கவேண்டும். குறைந்தபட்சமாக அணையில் 60 டி.எம்.சி., நீர் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் தண்ணீர் குறுவை சாகுபடிக்கு போதுமானதல்ல; எனினும், வரும் நாட்களில் மழை பெய்யும் அல்லது கர்நாடகா நீர் திறக்கும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசு அணையில் நீர் திறக்க தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
88 அடி நீரை வைத்து முழு சம்பா சாகுபடி சாத்தியமில்லை. விரிவாக்க பாசனப் பகுதிகளுக்கு நீர் பாய்ச்ச முடியாது. அங்கெல்லாம் மாற்றுப் பயிர்களுக்கு மட்டுமே அனுமதி தந்து அதற்கான அரசு உதவியும் செய்யலாம் . கூட்டுக் குடிநீர்த் திட்டப் பகுதிகளான 15 க்கும் மேற்பட்ட மாவட்ட குடிநீர்த் தேவைதான் அத்தியாவசியமானது.
தானும் விவசாயீ நண்பன் என்று காட்டிக்கொள்ளவே இந்த ஏற்பாடு. காணொளி வாயிலாகவே திறக்கலாமே . வாகனங்களின் பயன்பாட்டுக்களில் இக்கனம் சிக்கனம் தேவை. மக்கள் வரிப்பணத்தை சிலவுசெய்யும்போது பயஉணர்வு வேண்டும் . அது இந்த அரசுக்கு சுத்தமாகவே இல்லை.
குறுவை க்கு செப்டம்பர் மாதம் தண்ணீர்??????
இந்த மாதிரி நேரங்களில் அணையை தூர்வாரும் பணிகளை செய்யலாம். அரசு நடவடிக்கை எடுக்குமா ?
தாமதமான நீர்திறப்பால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி கிடையாது என்பதால் ஓருபோகமாக சம்பா மட்டுமே மேற்கொள்ளமுடியும். எனவே அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் சம்பா பயிரிடுவதால், விதைநெல், உரம், பூச்சிமருந்து, விவசாய தொழிலாளர்கள் தேவைப்படும். எனவே தட்டுப்பாடு இல்லாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்
ஏற்பாடுகள் தீவிரம்? அப்படி என்றால்? அணையின் கதவுகளை திறக்க ஒரு பெரும் விழா, மக்கள் வரிப்பணத்தில் செலவழிக்க தீர்மானமா? அடப்பாவிகளா... எப்படித்தான் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பது என்பதில் ஒரு கட்டுப்பாடு இல்லையா?
மகிழ்ச்சி மகிழ்ச்சியோ மகிழ்ச்சி கண்டிப்பாக நிலமகள் மனம் குளிர்ந்ததும் வருணபகவான் அனந்த கண்ணீர் மழை சிந்துவார்.
போனவருச மழையை நம்பி விதை விதைச்சாருமேலும்
-
ஆசிரியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்
-
குற்றவியல் நீதிமன்ற கட்டடம் வழக்கறிஞர் சங்கம் நன்றி
-
ராமநாபுரம் மாவட்டம் நிகழ்ச்சி
-
ராமநாதபுரத்தில் நடை பாதைகள் மாயம் :தினமும் போக்குவரத்து நெரிசலால் அவதி
-
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கிராம சாலையை ஆக்கிரமிக்கும் முள் மரங்கள்
-
ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் நிறுத்துவதால் பயணிகள் அவதி