குற்றவியல் நீதிமன்ற கட்டடம் வழக்கறிஞர் சங்கம் நன்றி
புதுச்சேரி: ‘குற்றவியல் நீதிமன்றம், சட்ட உதவி சேவைகளுக்கான மையம், குடும்ப நல விசாரணை மையம் கட்டப்படும் எவ, பட்ஜெட்டில் அறிவித்துள்ள முதல்வர் ரங்கசாமிக்கு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் பொதுச் செயலாளர் நாராயணகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி பட்ஜெட்டை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். அதில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.60.19 கோடி மதிப்பில் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சட்ட உதவி சேவைகளுக்கான கட்டடம் கட்டடப்படும் என அறிவித்துள்ளார்.
காரைக்கால் நீதிமன்ற வளாகத்தில் ரூ.6.27 கோடி மதிப்பில் வழக்கறிஞர்கள் தங்கும் அறை, குடும்ப நல விசாரணை மையம் உட்பட கூடுதல் அறைகள் கட்டப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, முதல்வர் ரங்கசாமிக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்