ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் நிறுத்துவதால் பயணிகள் அவதி
சாத்துார்:ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் கோவில்பட்டி இடையில் அமைந்துள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்து சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வர்த்தக மையமாக உள்ளது.
ஏழாயிரம் பண்ணை பஸ்ஸ்டாண்டில் இருந்து சாத்துார் , கோவில்பட்டி, சங்கரன்கோவில், கழுகுமலை, உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் வெளியூரில் பணிபுரியும் பணியாளர்களும் பஸ் ஸ்டாண்ட் வந்து பஸ் ஏறி செல்லும் நிலையில் இங்கு டூவீலர்கள் நிறுத்துவதற்கு முறையான வாகன காப்பகம் இல்லாத நிலை உள்ளது.
பஸ் ஸ்டாண்டில் வாகன காப்பகம் அமைப்பதற்காக தேவையான இட வசதி இருந்தும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் ,வெளியூர் செல்லும் பயணிகள் நிழற்குடையை டூ வீலர்கள் நிறுத்தும் இடமாக மாற்றி உள்ளனர்.
இதனால் பயணிகள் உட்காருவதற்கு போதுமான இட வசதி இன்றி அவதிப்படும் நிலை உள்ளது.மேலும் பஸ் ஸ்டாண்டில் உள்ள இருக்கைகளும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
கர்ப்பிணிகள் முதியவர்கள் உட்காருவதற்கு இடவசதி இன்றி தரையில் அமர்ந்து காத்திருக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் புதிய இருக்கைகள் வசதி செய்து தருவதோடு டூவீலர்கள் நிறுத்துவதற்கு புதிய செட் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
லைட் ரீடிங்... களைகட்டிய கலைத்திருவிழா போட்டிகள் இசை, நடனம், நாடக திறமைகளை வெளிப்படுத்தி பள்ளி மாணவர்கள்
-
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு சேவை உரிமை ஆவண திட்டம் செப். 1ல் அமல்
-
கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
-
டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; இருவர் காயம்
-
2 மாதங்களில் 731 சாலை விபத்து 1,204 பேருக்கு அவசர சிகிச்சை
-
டவுன் பஸ் இயக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்