பாதாள சாக்கடைக்கு தோண்டிய ரோடு 2 மாதம் ஆன பிறகும் சீரமைக்கவில்லை
கோவை: 'பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டிய வடவள்ளி - இடையர்பாளையம் ரோடு, 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சீரமைக்கவில்லை' என, சாலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது: சத்தி ரோட்டில் புரோஜோன் மால் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழித்தடத்தை மறிக்கும் அளவுக்கு கோவில் உள்ளது; வேறிடத்துக்கு மாற்ற வேண்டும்.
சாய்பாபா காலனி மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. சாலை மார்க்கத்தில் பாதசாரிகளுக்கான நடைபாதையில் சிலாப்கள் திறந்திருக்கின்றன. ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின்கம்பங்கள் உள்ளன. குழாய்கள், ஒயர்கள் காணப்படுகின்றன.
ரோட்டின் மையத்தில் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். கோர்ட் உத்தரவை மீறி சிக்னல்களில் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே அறிவுறுத்தியும் அகற்றவில்லை. புதிதாகவும் பலகைகள் வைக்கப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சொந்தமான ரோடுகளில் மட்டும் விளம்பர பலகைகள் அகற்றப்படுகின்றன. மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான ரோடுகளில் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்.
வடவள்ளி - இடையர்பாளையம் ரோட்டில் 3 கி.மீ.க்கு பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டது; இரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் ரோடு சீரமைக்கவில்லை. வாகனங்கள் செல்ல ஒரே வழியே இருப்பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படுகிறது.
ராமநாதபுரம் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நஞ்சுண்டாபுரத்தில் இருந்து சுங்கம் சந்திப்பை சென்றடையும் வகையில் 80 அடி திட்டச்சாலை உருவாக்க வேண்டும்.
சத்தி ரோட்டை தோண்டி வேலை செய்ததும், 500 மீட்டர் வரை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும். மரப்பாலத்தில் சுரங்கப்பாதை வேலை நடக்கிறது; பாலக்காடு செல்வதற்கும் அங்கிருந்து வருவோருக்கும் மாற்றுப்பாதை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
மேலும்
-
ஐபிஓ,அலசல்:இஎஸ்டிஎஸ்., சாப்ட்வேர் சொல்யூஷன் லிமிடெட்
-
'நம்மை வளர்த்த கலையை நாம வளர்க்கணும்!'
-
உ.பி.,யில் பயிற்சி விமானம் விழுந்து 2 விமானிகள் பலி
-
உலோக துறை குறியீடு 8 சதவிகிதம் உயர்வு யார், எந்த உலோகத்தில் முதலீடு செய்யலாம்? பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'எக்சிஸ்' அறிக்கை
-
கள்ள நோட்டு கும்பல் சுற்றிவளைப்பு
-
வால்மீகீஸ்வரர் கோவிலின் 85 ஏக்கர் நிலம் மாயம்?