உலோக துறை குறியீடு 8 சதவிகிதம் உயர்வு: யார், எந்த உலோகத்தில் முதலீடு செய்யலாம்? பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான எக்சிஸ் அறிக்கை


உலோக துறை பங்குகள் கடந்த ஓராண்டில் சந்தையைவிட கணிசமாக உயர்ந்துள்ளது. 'நிப்டி மெட்டல்' குறியீடு கடந்த ஓராண்டில் 42.50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரம், 'நிப்டி 50' கிட்டதட்ட 2 சதவீதம் சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மெட்டல் குறியீடு 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தற்போதைய ஏற்றத்தை பார்த்து புதிதாக முதலீடு செய்வது சரியா? அல்லது ஏற்கனவே பங்குகளை வைத்திருப்பவர்கள் என்ன செய்யலாம்? என்பது பற்றி பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'எக்சிஸ்' நிறுவனத்தின் சீனியர் ரிசர்ச் அனலிஸ்ட் டி.விக்னேஷ் தெரிவித்ததாவது:

உலோக பங்குகளின் பி/இ., விகிதம் குறைவாக இருப்பதால் மட்டுமே, அந்த பங்குகள் மலிவாக உள்ளதாக கருதி முதலீடு செய்வது சரியான அணுகுமுறை அல்ல. தற்போது உலோகங்களின் விலை உயர்ந்த நிலையில் இருப்பதால், நிறுவனங்களின் லாபமும் அதிகமாக இருக்கிறது. இந்த அதிக லாபத்தின் அடிப்படையில் மட்டும் பங்குகளின் மதிப்பை கணித்து முதலீட்டு முடிவு எடுப்பது சரியாக இருக்காது.
Latest Tamil News
எனவே, பங்கின் விலை தொடர்ந்து உயர்கிறது என்பதற்காக கண்மூடித்தனமாக வாங்குவதை தவிர்க்க வேண்டும். உலோகங்களின் விலை சுழற்சி அடிப்படையில் மாறக்கூடியவை என்பதால், பங்குகளும் தற்போதைய உயர்வுக்கு பிறகு சரிவையும் சந்திக்க வாய்ப்புள்ளது.

எனவே, ஏற்கனவே உலோக பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள் தற்போதைய வலுவான நிலையை பயன்படுத்தி ஒரு பகுதி லாபத்தை பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஸ்டீல் துறை சிறந்த ரிஸ்க் ரிவார்டு வாய்ப்பை வழங்கக்கூடும்.

நீண்டகால முதலீட்டாளர்கள் ஸ்டீல் பங்குகளை முன்னுரிமையில் வைத்து, 'ஹிந்துஸ்தான் ஜிங்க், ஹிண்டால்கோ' ஆகிய நிறுவன பங்குகளை வாங்குவதற்கான விலையை நிர்ணயித்து கண்காணிப்பில் வைக்கலாம்.

குறுகியகால வர்த்தகர்கள், நிப்டி மெட்டல் குறியீடு 13,900 - 14,000 புள்ளிகளுக்கு மேல் உறுதியான பிரேக் அவுட் கொடுத்தால் மட்டுமே புதிய நிலைகளை பரிசீலிக்கலாம்.

உலோகத்துறை சுழற்சி சார்ந்தது என்பதால், முதல்முறை முதலீட்டாளர்கள், இத்துறையை தவிர்ப்பதே சிறந்தது.

பங்கு விலை உயர்வது மட்டும் உலோக விலை சுழற்சி தொடர்ந்து வலுக்கும் என்பதற்கான ஆதாரம் அல்ல. முதலீட்டுக்கு முன், சம்பந்தப்பட்ட உலோகத்தின் விலை அதன் நீண்டகால வரம்பில் உச்சத்துக்கு அருகிலா அல்லது கீழ் நிலையில் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tamil News

உலோகத்துறை சுழற்சி சார்ந்தது என்பதால், முதலீடு பற்றி கற்றுக்கொள்ளும் முதல்முறை முதலீட்டாளர்கள், இத்துறையை தவிர்ப்பதே சிறந்தது

@block_B@ உலோகத்துறை பங்குகளின் நிலை பங்கு விலை பி/இ., விகிதம் விலை/புத்தக மதிப்பு ஆர்.ஓ.சி.இ., டிவிடெண்டு ஈல்டு ஹிந்துஸ்தான் ஜிங்க் ரூ.627 15.70 11.8 மடங்கு 69.2% 1.76% ஹிண்டால்கோ ரூ.1,054 11.40 1.7 மடங்கு 13.2% 0.49% டாடா ஸ்டீல் ரூ.188 19.80 2.3 மடங்கு 12.5% 2.13% என்.எம்.டி.சி., ரூ.87.70 10.30 2.3 மடங்கு 27.6% 2.85% கடினம் என்ற வார்த்தைக்கு பதிலாக சரியான அணுகுமுறை அல்ல. ஏனென்றால் பி.இ., விகிதம் கம்மியாக் இருக்கு என்ற ஒரே காரணத்துக்காக பங்கில் முதலீடு செய்வது தவறானது. இப்போ உலோகங்களின் விலை அதிகமாக இருக்கறதால இதன் அடிப்படையில் முடிவெடுப்பது சரியாக இருக்காது. அதனால, விலை ஏறுது என நினைத்து கண்மூடித்தனமா வாங்குவது சரியா இருக்காது. மெட்டல் பங்குகள் தற்காலிகமாக உயரும் அதேபோல இறங்கவும் வாய்ப்புள்ளது.block_B

Advertisement