உ.பி.,யில் பயிற்சி விமானம் விழுந்து 2 விமானிகள் பலி
கான்பூர் : உத்தர பிரதேசத்தில் கங்கை நதிக்கரை அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில், பயிற்சி விமானி மற்றும் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் உயிரிழந்தனர்.
உ.பி.,யின் கான்பூரில் உள்ள, 'கார்க் ஏவியேஷன்' என்ற விமான பயிற்சி நிறுவனத்திற்கு சொந்தமான, 'டெக்னாம்' ரக விமானம் நேற்று காலை 11:30 மணிக்கு புறப்பட்டது.
இரட்டை இன்ஜின் கொண்ட இந்த விமானத்தில், குஜராத்தைச் சேர்ந்த பயிற்றுனர் சச்சின் பாட்டியா, கர்நாடகாவைச் சேர்ந்த பயிற்சி விமானி அபிஷேக் பூஜாரி ஆகியோர் சென்றனர்.
இந்த விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில், நாதபுர்வா என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement