வால்மீகீஸ்வரர் கோவிலின் 85 ஏக்கர் நிலம் மாயம்?
ஆற்காடு: ஹிந்து முன்னணி வேலுார் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் குமார் கூறியதாவது:
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரத்தில் வால்மீகீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, 85 ஏக்கர் நிலங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவில் நிலங்களில், மாற்று மதத்தினர் கடைகள் கட்டி வியாபாரம் செய்து வருகின்றனர். தொடர் ஆக்கிரமிப்பால், அப்பகுதியைச் சேர்ந்த, 60 ஹிந்து குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோவில், நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை, ஹிந்து சமய அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் உள்ளதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுசம்பந்தமாக, ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement