துாத்துக்குடி துறைமுகத்தில் கச்சா பாமாயில் இறக்குமதி
துாத்துக்குடி: துாத்துக்குடி துறைமுகத்தில் மாற்றியமைக்கப்பட்ட தளத்தில் முதல் முறையாக கச்சா பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது.
துாத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரண்டாவது நிலக்கரி தளம் சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.
அந்த தளத்தில் முதல் முறையாக கச்சா பாமாயில் ஏற்றி வந்த கப்பலில் இருந்து சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டது.இதுகுறித்து, துறைமுக ஆணை ய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் கூறுகையில், “துறைமுக பகுதியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள சேமி ப்பு தொட்டிகளுடன் மாற்றியமைக்கப்பட்ட நிலக்கரி தளம் வரை குழாய்கள் இணைக்கப்பட்டு பாமாயில் கையாளப்படுகிறது.
மலேசியா நாட்டின் குனாக் துறைமுகத்தில் இருந்து 9.70 மீட்டர் மிதவை ஆழம் மற்றும் 143 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் 15,000 டன் கச்சா பாமாயிலை ஏற்றிக்கொண்டு, துறைமுகம் வந்தடைந்தது” என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்
Advertisement
Advertisement