வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 2982026 )
மக்காச்சோளம்
கடந்த வாரம் : ரூ. 26.60
தற்போது : ரூ. 27.90
வரத்து சீராக உள்ளது. கடந்த சில வாரங்களாக சிறிய ஏற்ற இறக்கத்துடன் இந்த விலையே தொடர்கிறது. மக்காச்சோளத்துக்கு தேவை இருப்பதால் மேலும் விலை உயரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
அரகண்டநல்லுார், விழுப்புரம்.
உளுந்து
கடந்த வாரம் : ரூ. 95.80
தற்போது : ரூ. 89.40
எல் நினோ தாக்கம் காரணமாக உளுந்து விலை உச்சத்துக்கு சென்று தற்போது சற்று
குறைந்துள்ளது. சிறிய ஏற்ற இறக்கத்துடன் இந்த விலையே தொடரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
விருத்தாசலம், கடலுார்.
மிளகாய் வற்றல்
கடந்த வாரம் : ரூ. 293.00
தற்போது : ரூ. 252.00
வரத்து மிகவும் குறைவாக உள்ளது. கடந்த வாரத்தில் விலை உயர்ந்து காணப்பட்ட மிளகாய், தற்போது குறைந்துள்ளது. இந்த விலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
சேத்துபட்டு, திருவண்ணாமலை.


கொப்பரை
கடந்த வாரம் : ரூ. 160.50
தற்போது : ரூ. 171.70
வரத்து அதிகமாக இருந்தாலும் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. தரத்தை பொறுத்து 149 முதல் 171 ரூபாய் வரை விற்கிறது. தேங்காய் எண்ணெய் தேவை அதிகரிப்பால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.
சந்தை
பெருந்துறை, ஈரோடு.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 சரிவு
-
விடுமுறைக்கு பிறகு கூடியது தமிழக சட்டசபை; 4 துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
Advertisement
Advertisement