மலாய் சிக்கன் கிரேவி
செய்முறை :
முலாம்பழம் விதைகள், கசகசா, தேங்காய், பாதாம் மற்றும் முந்திரி ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல் அரைத்து வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் உலர்ந்த மிளகாய், பிரிஞ்சி இலைகள், இலவங்கப்பட்டை, ஏலக்காய், உப்பு மற்றும் சிக்கன் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து -10 நிமிடங்கள் வேகவைக்கவும். சிக்கனில் இருந்து தண்ணீர் பிரிந்து வற்றும் வரை வேக வைக்க வேண்டும். அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, வெங்காய ப்யூரி சேர்த்து, 3-5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
அதில் இரண்டரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, வெள்ளை மிளகு தூள் மற்றும் வேக வைத்த சிக்கன் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின்பு இதில் அரைத்து வைத்த பேஸ்ட் மற்றும் கரம் மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு ப்ரஷ் கிரீம்,தயிர் சேர்த்து கிரேவி நன்கு கெட்டியாகும் வரை 5 முதல் 7 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். இப்போது ருசியான மலாய் சிக்கன் கிரேவி தயார். இதனை நெய் சாதம் மற்றும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். சாதத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்