மண் லாரியை விரட்டி வீடியோ எடுத்த தாசில்தார்
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் சோழவந்தான் ரோட்டில் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல், வாகன சோதனை செய்தார். அவ்வழியாக அனுமதியின்றி குவாரி கழிவு மண் ஏற்றி வந்த லாரியை பிடித்தார். தன் வாகனத்தை பின் தொடர்ந்து லாரியை வாடிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் கொண்டுவர தாசில்தார் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் நான்கு வழிச்சாலை ரோட்டில் வந்தபோது, பாலத்தின் கீழ் சென்று மதுரை ரோட்டில் திரும்பிய லாரி, அப்பகுதி பெட்ரோல் பங்க் வழியாக சென்று காலி இடத்தில் கழிவு மண்ணை கொட்டியது. இக்காட்சிகளை தாசில்தார் வாகனத்தில் இருந்தபடியே பின் தொடர்ந்து வீடியோ எடுத்தார். லாரியில் இருந்து இறங்கிய இருவர் தாசில்தாரிடம் கெஞ்சினர்.
'மண்ணை கொட்டி விட்டீர்கள். நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்,' என அவர்களிடம் கூறிய தாசில்தார் வாடிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் லாரி உரிமையாளர் குறித்து விசாரிக்கின்றனர்.