அரளி விதை அரைத்து குடித்தவர் உயிரிழப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த வினோபா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 60. இவர், குடும்ப பிரசனை காரணமாக , அரளி விதை அரைத்து குடித்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் அவரை மீட்டு, உத்திரமேரூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

மேல்சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வெங்கடேசன் உயிரிழந்தார். இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், உத்திரமேரூர் அடுத்த குப் பைநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன், 53. கடந்த 26ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரங்கன் உயிரிழந்தார். உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement