மளிகை கடையில் ரூ.40 ஆயிரம் திருட்டு

படப்பை: படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரியில் உள்ள மளிகை கடையில் இருந்த 40 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில் தேவநாயகி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், பால் வியாபாரிக்கு வழங்குவதற்காக, 40 ஆயிரம் ரூபாயை கடையில் வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு, நேற்று காலை கடையை திறந்து பார்த்தபோது, கடையில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்படி, படப்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement