கிர்கிஸ்தானில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பிரதமர் மோடி நாளை (ஆகஸ்ட் 29) முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த 4 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, கிர்கிஸ்தானின் பிஷ்கக்கில் நடைபெறும் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

இதைத்தொடர்ந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். அந்த வகையில், ரஷ்ய அதிபர் புடினையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தாஷ்கண்டில் உள்ள சாஸ்திரி நினைவிடம் மற்றும் தாஷ்கந்த் மாநிலப் பல்கலையில் உள்ள மகாத்மா காந்தி மையம் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.




Advertisement