கூந்தலில் மலரும் கொரியன் 'டிரெண்ட்'

ஏனோ தெரியவில்லை, நம்ம ஊர் இளைஞர்களுக்கு கொரியன் பொருட்கள் மீது தனி ஆர்வம். தொடக்கத்தில் கொரியன் வெப் சீரிஸ் மூலமாக அறிமுகமான இந்த டிரெண்ட், தற்போது ஆக்சஸரீஸ், கேட்ஜெட்ஸ், உடைகள், ஹேர் ஸ்டைல் என லிஸ்ட் நீள்கிறது.

அந்த வரிசையில் தற்போது டிரெண்டாகி வருவது கொரியன் ப்ளவர் கிளிப்ஸ். விதவிதமான அளவுகள், வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் கிடைக்கும் இந்த பூ கிளிப்ஸ், சிம்பிளான ஹேர் ஸ்டைலையே அழகான லுக் ஆக மாற்றுகிறது.

கூந்தலில் அணிவதுடன் நிறுத்தாமல், இந்த கிளிப்களை பேக்கில் தொங்கவிடுவதும், தங்களுக்கு பிடித்தவர்களின் சட்டையில் மாட்டி விடுவதும் இளம் பெண்களிடம் புதிய டிரெண்டாகி வருகிறது.

அழகுடன் சேர்த்து ஒரு கியூட்டான உணர்வையும் வெளிப்படுத்துவதால், இந்த கொரியன் ப்ளவர் கிளிப்ஸ் இளம் பெண்களின் பேஷன் சாய்ஸில் இடம் பிடித்துள்ளது.

Advertisement