வெள்ள மீட்புப் பணிகளுக்கு வெளிநாட்டு உதவி; ஓகே சொன்னது நேபாள அரசு
காத்மாண்டு: சர்வதேச தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை மீட்பு பணிகளில் ஈடுபடுத்த அனுமதி மறுத்த தனது முடிவை நேபாள அரசு திரும்பப் பெற்றுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லையை யொட்டிய, நேபாளத்தில்ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 500-ஐ கடந்துள்ளது; 1,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
மீட்புப்பணிகள் சவாலாக உள்ளன. இதனால், இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், வங்கதேசம், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள், மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறப்புப் படைகளை அனுப்ப முன்வந்தன. ஆனால் இதை, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா மறுத்துவிட்டார்.
''எங்கள் பாதுகாப்புப் படைகளால் மீட்புப் பணிகளை சிறப்பாக செய்ய முடியும். நிவாரணப் பொருட்கள் மற்றும் பண உதவியை மட்டும் ஏற்கிறோம். மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டாம்,'' என, அவர் கூறினார்.
இதற்கிடையே, திபெத் பகுதியில் மீண்டும் ஒரு ஏரி உடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ரசுவா மாவட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முடிவில் மாற்றம்
தற்போது சர்வதேச தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை மீட்பு பணிகளில் ஈடுபடுத்த அனுமதி மறுத்த தனது முடிவை நேபாள அரசு திரும்பப் பெற்றுள்ளது. பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு பிறகு, சுரங்கப்பாதை மீட்புகள், டிஎன்ஏ பரிசோதனை மற்றும் தடயவியல் அடையாளம் காணுதல் ஆகியவற்றுக்கு இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் ஆதரவை ஏற்றுக்கொண்டது.
உண்மையான உயிரிழப்பு, சேதம் ஊடககங்களில் சொல்வதை விட பல மடங்கு அதிகம். பனிப்பாறைகள் இந்த அளவு சேதத்தை விளைவிக்குமா ? பல நீர்மின்நிலையங்கள் அடித்து செல்லப்பட்டதாக தகவல். பீகாரிலும் வெள்ளமாம். கேட்கவே பயமாக உள்ளதே !
ஓகே,,, என்று சொல்ல வைத்து விட்டது இயற்கை.