ராயல் ஓக் பர்னிச்சர் நிறுவன திறப்பு விழா
பெ.நா.பாளையம்: மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர் பழமுதிர் நிலையம் எதிரில், இந்தியாவின் முன்னணி பர்னிச்சர் பிராண்டான ராயல் ஓக் பர்னிச்சர் திறப்பு விழா நடந்தது.
இந்த பிரம்மாண்ட பிளாக் ஷிப் ஸ்டோர், 16,000 சதுர அடியில் அமைந்துள்ளது. கே.ஜி.மருத்துவமனை சேர்மன் டாக்டர் பக்தவத்சலம், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, கங்கா மகளிர் மற்றும் குழந்தைகள் மையத்தின் ஆலோசகர் டாக்டர் ஆனந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதிய ஸ்டோரில் லிவிங் ரூம்கள், படுக்கை அறைகள், டைனிங் பகுதிகள், ஸ்டடி மற்றும் அலுவலகத்துக்கு தேவையான பர்னிச்சர், வீட்டு அலங்கார பொருட்கள், மெத்தைகள் உள்ளிட்ட பர்னிச்சர், ஒரே கூரையின் கீழ் வாங்கலாம்.
ராயல் ஓக் பர்னிச்சர் நிறுவனத்தின் தலைவர் விஜய் சுப்பிரமணியம் கூறுகையில், ‘‘இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில், 250க்கும் மேற்பட்ட ஸ்டோர்களை கொண்டுள்ளது ராயல் ஓக் பர்னிச்சர். கோயம்புத்தூர் மக்கள் சர்வதேச தரத்திலான பர்னிச்சரை விரும்பி வரவேற்பார்கள் என நம்புகிறோம்,’’ என்றார்.
கார்னிஷ் இன்டீரியர்ஸ் நிறுவனத்தின் பிரான்சைஸ் பார்ட்னர் பன்னீர்செல்வம், ராயல் ஓக் நிறுவனத்தின் தலைவர் விஜய் சுப்பிரமணியம், நிர்வாக இயக்குனர் மதன் சுப்பிரமணியம், முதன்மை விருந்தினர் கொடிசியா தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
தொடரை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வி
-
'கவுன்டி' அணியில் அகிப் நபி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக
-
கிழக்கு மண்டல அணி அபாரம்: துலீப் டிராபி அரையிறுதியில்
-
இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
-
ஜெர்மனி மீண்டும் சாம்பியன்: உலக கோப்பை ஹாக்கியில் கலக்கல்
-
பெடரருக்கு கவுரவம்: 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்