நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட என்ன காரணம்; செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்
நமது நிருபர்
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட என்ன காரணம் என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகள் செயற்கைக் கோள் படங்களை ஆய்வு செய்கின்றனர்.
நேபாளத்தில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 392 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 1,400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். குறிப்பாக, இந்தியர்கள் 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இதுவரையில் வெள்ளத்தில் சிக்கிய 880க்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. துயரச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, விஞ்ஞானிகளும் நிபுணர்களும் நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் தொடர்பான செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
அந்த விஞ்ஞானிகளில் இருவர் புவியமைப்பியல் வல்லுநர்களான கிறிஸ்டன் குக் மற்றும் டான் ஷுகர் ஆவர். தாங்கள் பெற்ற படங்கள் தெளிவற்றவையாக இருந்ததாகவும், திபெத்துடனான எல்லைக்கு அருகிலுள்ள லாங்டாங் லிருங் சிகரத்திலிருந்து ஒரு பனியாற்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததை மட்டுமே தங்களால் காண முடிந்ததாகவும் அவர்கள் கூறினர்.
இங்கு தனுஷ்கோடி போல நேபாளத்தின் இதுபோன்ற பகுதிகள் வாழத்தகுதியற்றவையாகவும் சுற்றுலா செல்லவும் அது ஆன்மிக சுற்றுலாவாக இருந்தாலும் முற்றிலும் தடை செய்யப்படவேண்டும்.. காலநிலைகளை கணிக்கமுடியாத இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் மிக முக்கியம்..
இது என்னவோ சீனா காரன் இந்தியா வுக்கு போட்ட ஸ்கெட்ச் மாதிரி தெரியுது... பாவம் நேபாளம் மாட்டிகிச்சி..
போன உயிர் திரும்ப வராதுமேலும்
-
பல்லாயிரம் கோடி சொத்து கைவிட்டுப் போனது; 75 வயதில் வேலைக்கு போகிறார் சுபாஷ் சந்திரா
-
கூந்தலில் மலரும் கொரியன் ‘டிரெண்ட்’
-
இன்று முதல் மறுபடியும் நாடகம் பார்க்கலாம்...ரசிக்கலாம்!
-
கோவை தி.மு.க.வுக்கு 5 மா.செ.
-
ராயல் ஓக் பர்னிச்சர் நிறுவன திறப்பு விழா
-
வெள்ள மீட்புப் பணிகளுக்கு வெளிநாட்டு உதவி; ஓகே சொன்னது நேபாள அரசு