காலையில் குறைந்த ஆபரண தங்கம் விலை மாலையில் உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.600 உயர்ந்துள்ளது.


சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து, தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை பெரும்பாலும் ஏறுமுகமாக இருந்து வருகிறது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்து ஏறி, இறங்கி விற்பனையாகி வருகிறது.


ஆனால், தங்கம் விலை நேற்று (ஆக.,27) காலையில் ரூ.560, மாலையில் ரூ.1,720 என ஒரே நாளில் ரூ.1,280 குறைந்து ஆபரணப் பிரியர்களை குஷியாக்கியது.


இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை ரூ.600 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200க்கும், கிராமுக்கு ரூ.75 சரிந்து ரூ. 14,650க்கும் விற்பனையாகி வருகிறது.

ஆனால், மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்குரூ.1,200 உயர்ந்தது. சவரனுக்கு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 400 ரூபாய் ஆக விற்பனை ஆனது.

ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, 14 ஆயிரத்து 800 ரூபாய் ஆக விற்பனை ஆனது.

வெள்ளியின் விலை

அதேபோல, கடந்த 3 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு வர்த்தகமாகிறது.

Advertisement