துாக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே தலைவலி தாங்க முடியாததால் வாலிபர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் மதன், 21; தியாகதுருகத்தில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வந்தார். இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுவது வழக்கம்.

நேற்று அதிகாலை மதனுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாததால் மதன் மின்விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த மதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement