போலீஸ் செய்திகள்: திருப்பூர்

போதை மாத்திரை; வாலிபர் கைது

போதைக்கு வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்த சையத் அலி, 21 என்பவரை, வீரபாண்டி போலீசார் கைது செய்து, 80 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மது பாட்டில்கள் பறிமுதல்

கரைத்தோட்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற பாலச்சந்திரன், 49, பிச்சம்பாளையம் புதுார் பகுதியில் மணி, 33 ஆகியோரை போலீசார் கைது செய்து, 22 மது பாட்டில்களைபறிமுதல் செய்தனர்.

சூதாட்டம்; 13 பேர் கைது


பிச்சம்பாளையம் புதுார் பகுதியில் பணம் வைத்து சூதாடிய சண்முகம், 44, பிரகாஷ், 42, சதீஷ்குமார், 34, பிரபு, 40, மோகன், 34, வீரமணி, 43, சுரேஷ், 43, மணிகண்டன், 35, துரை, 42, செல்வராஜ், 44, பிரபாகரன், 42, மோகன்தாஸ், 35, ராஜ்மோகன், 32 ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 11,500 ரூபாய் ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement