விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு தி.மு.க., வேட்பாளர்கள் பதிலளிக்க உத்தரவு

1

சென்னை: தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்க, தி.மு.க., வேட்பாளர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் தொகுதியில், முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, தி.மு.க., வேட்பாளர் சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இதேபோல், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் , அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து, தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மோகன், வாக்காளர் சிவராஜ் ஆகியோர், தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், அவற்றுக்கு பதிலளிக்குமாறு, தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்த தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்., 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Advertisement