டவுன் பஸ் இயக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
அன்னுார்: அன்னுாரில் இருந்து தாசபாளையம், சாலைப்பாளையம், சாணாம்பாளையம் வழியாக, அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும், என, மூன்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக, கோரி வருகின்றனர். தொகுதி எம்.எல்.ஏ., வும், அமைச்சருமான கமலியிடமும் மனு அளித்தனர். எனினும் நடவடிக்கை இல்லை.
நேற்றுமுன்தினம், அன்னுார் பயணியர் மாளிகை முன், மூன்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், ‘விரைவில் அரசு டவுன் பஸ் இவ்வழித்தடத்தில் இயக்காவிட்டால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என கூறினர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement