'பழசை மறக்க முடியலையோ?'

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவரான, தி.மு.க.,வைச் சேர்ந்த தனியரசுதலைமையில், தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் மா.கம்யூ., கட்சி கவுன்சிலர் ஜெயராமன் உள்ளிட் டோர், கவுன்சிலர் வார்டுகளுக்கு நிதி ஒதுக்காத த.வெ.க., அரசை கண்டித்து, மண்டல அலுவலகம் முன், சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதை பார்த்த இளம் நிருபர் ஒருவர், 'த.வெ.க., அரசை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துறதுல ஒரு நியாயம் இருக்கு... ஆனா, த.வெ.க., அரசுக்கு ஆதரவு தந்துட்டு இருக்கும் மா.கம்யூ., கவுன் சிலரும் இதுல சேர்ந்திருக்காரே... அவரது கட்சி தலைமை, இவரை கண்டிக்காதா?' என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மூத்த நிருபர் ஒருவர், 'பல வருஷங்களா தி.மு.க., கூட்டணியிலயே இருந்த மா.கம்யூ., கவுன்சிலர் ஜெய ராமனால, பழைய பாசத்தை மறக்க முடியலை போலும்' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.

Advertisement