கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
தடாகம்: தடாகம் ரோடு, அரசு பொறியியல் கல்லுாரியில், தொழில்நுட்ப பதவிகளை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி தொழில்நுட்பப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, கூடுதல் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்ற தொழில்நுட்ப பணியாளர்கள், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்காமல் பணி ஓய்வு பெறுகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை, தொழில்நுட்ப பணியிடங்களை மறுசீரமைப்பு செய்யும் பணியை விரைவாக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு பொறியியல் கல்லுாரி தொழில்நுட்ப அலுவலர்கள் சங்க மாநிலத்தலைவர் கார்த்திகேயன், மாநில இணைச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், செயற்குழு உறுப்பினர்கள் ராகவ தேவி, ராமசாமி, ஆலோசகர் சசிகுமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement