மதுபாட்டில் விற்பனை 2 பேர் கைது 

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

கரியாலுார் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாரம் கிராமத்தை சேர்ந்த சின்னான் மகன் சரவணன்,35; மற்றும் ஆண்டி மகன் விஜயகாந்த்,37; ஆகிய இருவரும் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த, 124 மதுபாட்டில்களை, கரியாலுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement