தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி

புழல்: புழல், காவாங்கரை பகுதியைச் சேர்ந்த பிரகாஷின் மகள் யோக மாயா, 1. பிரகாஷ் வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்ற நிலையில், அவரது மனைவி சுமித்ரா, 26, சமையல் செய்து கொண்டிருந்தார்.

வீட்டில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பக்கெட்டில், குழந்தை யோக மாயா தவறி விழுந்துள்ளது. சிறிது நேரம் கழித்து பார்த்த சுமித்ரா, மூச்சுவிட முடியாமல் உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், குழந்தை உயிரிழந்தது தெரிந்தது.

புழல் போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement