ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து 14,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) தங்கம் விலை கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து, 14,505 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,360 ரூபாய் சரிவடைந்து, 1,16,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து 14,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரத்யேக வீடியோ!
தங்கம் விலை அதிரடி சரிவு இவ்ளோ கீழே வந்துடுச்சா? இன்றைய விலை நிலவரம் இதோ!
வீடியோ பார்த்து விலை அறிய கிளிக் செய்யவும்
தங்கம் விலை குறைந்து வருகிறது பரவாயில்ல
தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று எனக்கு தெரியவே இல்லை. அதுவும் வியப்பாக இருக்கின்றது. எத்தனையோ உலோகங்கள் இருக்கின்றது. ஆனால் தங்கத்திற்கு மட்டும் இப்படி மக்கள் அபரிவிதமான நம்பிக்கையையும் முதலீடும் செய்கிறார்கள். ஏன் என்று எனக்கு தெரியவே இல்லை.
சுருக்கமாகச் சொன்னால், மனிதன் உருவாக்கிய காகிதப் பணம் அல்லது டிஜிட்டல் முறைகள் எப்போது வேண்டுமானாலும் மதிப்பையிழக்கலாம், ஆனால் இயற்கை தந்த தங்கம் தன் மதிப்பை என்றுமே இழக்காது என்ற நம்பிக்கையே மக்கள் அதில் அதிக முதலீடு செய்யக் காரணம்.
விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்து போனாலும், தங்கத்தின் மோகம் ஒருபோதும் குறையாது என்பது தான் நிதர்சனமான உண்மைமேலும்
-
நீட் போராட்டக்காரர்கள் மீதான எப்ஐஆர்கள் ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு
-
நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டு சிறை
-
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன உறவுகள்: தேடி செல்வோருக்கு உதவ தமிழக அரசு சிறப்புக் குழு அறிவிப்பு
-
படகு கவிழ்ந்து விபத்து:159 பேர் உயிருடன் மீட்பு
-
எரிபொருள் தட்டுப்பாடு:கைகொடுத்த இந்தியா
-
இந்துகுஷ் மலைதொடரில் மிதமான நிலநடுக்கம்