விடுமுறைக்கு பிறகு கூடியது தமிழக சட்டசபை; 4 துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்
சென்னை: தமிழக சட்டசபை விடுமுறைக்கு பிறகு இன்று (ஆகஸ்ட் 31) கூடியது. 4 துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடை பெறுகிறது.
தமிழக சட்டசபை, இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அவை கூடியது கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கைக்கு, ''நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பதில் அளித்தார்.
சட்டசபையில் தான் பேசும்போது ஆதவை போக்குவரத்து துறை அமைச்சர் என ஓபிஎஸ் தவறாக குறிப்பிட்டார். அண்ணேன், நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என ஆதவ் கூறியதும் திருத்தி மீண்டும் ஓபிஎஸ் நெடுஞ்சாலைத்துறை என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்ததும், இன்றைய கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் விக்னேஷ், ஜெகதீஸ்வரி, வினோத் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழக சட்டசபை இன்றைய கூட்டத் தொடர்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்